Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 470)
Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்
அயி துர்விநயாத்மக த்வயா கிமு ம்ருத்ஸா பத வத்ஸ பக்ஷிதா இதி மாத்ருகிரம் சிரம் விபோ விததாம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸந் அயி துர்விநய ஆத்மக த்வயா கிமு ம்ருத்ஸா பத வத்ஸ பக்ஷிதா இதி மாத்ருகிரம் சிரம் விபோ விததாம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸந் अयि दुर्विनयात्मक त्वया किमु मृत्सा बत वत्स भक्षिता । इति मातृगिरं चिरं विभो वितथां त्वं प्रतिजज्ञिषे हसन्
எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! உனது தாய் உன்னிடம், “பொல்லாத பையனே! மண்ணைத் தின்றாயா?”, என்று கேட்டாள். ஆனால் அதற்கு நீ நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே நின்றாய். பின்னர், “இல்லை, நான் தின்னவில்லை, அது பொய்”, என்றாய்.