Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 469)
Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்
அயி தே ப்ரளயாவதௌ விபோ க்ஷிதி தோயாதி ஸமஸ்த பக்ஷிண: ம்ருதுபாசநதோ ருஜா பவேத் இதி பீதா ஜநநீ சுகோப ஸா அயி தே ப்ரளய அவதௌ விபோ க்ஷிதி தோய ஆதி ஸமஸ்த பக்ஷிண: ம்ருத் உபாசநத: ருஜா பவேத் இதி பீதா ஜநநீ சுகோப ஸா अयि ते प्रळयावधौ विभो क्षितितोयादिसमस्तभक्षिणः । मृदुपाशनतो रुजा भवेदिति भीता जननी चुकोप सा
ப்ரளயத்தின் போது அனைத்தையும் உண்டு விழுங்குபவனே! குருவாயூரப்பா! மண்ணைத் தின்றதால் உனக்கு நோய் ஏற்படுமோ என்று யசோதை பயந்து உன்னைக் கோபித்தாள் அல்லவா?