Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 468)

Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்

புநநப்யத பாலகை: ஸமம் த்வயி லீலாநிரதே ஜகத்பதே பல ஸஞ்சய வஞ்சந க்ருதா தவ ம்ருத் போஜநமூசுரர்பகா: புந: அபி அத பாலகை: ஸமம் த்வயி லீலா நிரதே ஜகத்பதே பல ஸஞ்சய வஞ்சந க்ருதா தவ ம்ருத் போஜநம் ஊசு: அர்பகா: पुनरप्यथ बालकैः समं त्वयि लीलानिरते जगत्पते । फलसञ्चयवञ्चनकृधा तव मृद्भोजनमूचुरर्भकाः

குருவாயூரப்பா! இந்த உலகின் பதியே! ஒரு நாள் உனது தோழர்களுடன் நீ விளையாடிக் கொண்டிருந்தாய். அந்த நேரம் அவர்கள் வைத்திருந்த பழங்களை, அவர்கள் அறியாமல் உண்டாய். இதனால் கோபம் கொண்ட அவர்கள் நீ மண்ணைத் தின்று விட்டதாக உனது தாயிடம் பொய் கூறினார்கள் அல்லவா?