Sriman Narayaneeyam - Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம் (ச்லோகம் 467)

Dasaka 46 - யசோதைக்கு விச்வரூபம்

அயி தேவ புரா கில த்வயி ஸ்வயம் உத்தானசயே ஸ்தநந்தயே பரிஜ்ரும்பணதோ வ்யபாவ்ருதே வதநே விச்வமசஷ்ட வல்லவீ அயி தேவ புரா கில த்வயி ஸ்வயம் உத்தானசயே ஸ்தநந்தயே பரிஜ்ரும்பணத: வ்யபாவ்ருதே வதநே விச்வம் அசஷ்ட வல்லவீ अयि देव पुरा किल त्वयि स्वयमुत्तानशये स्तनन्धये । परिजृम्भणतो व्यपावृते वदने विश्वमचष्ट वल्लवी

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவனே! ஒரு நாள் நீ உனது தாயின் ஸ்தனங்களில் இருந்து பாலைக் குடித்துவிட்டு, மல்லாந்து படுத்திருந்தாய். அப்போது நீ கொட்டாவி விட்டாய். உன்னுடைய வாய்க்குள் இந்த உலகம் முழுவதையும் யசோதை பார்த்தாள் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-7-34 முதல் x-7-37 மற்றும் x-8-32 முதல் x-8-45 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.