Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 466)

Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்

தவ ததி க்ருதமோஷே கோஷ யோஷா ஜநாநாம் அபஜத ஹ்ருதி ரோஷோ நாவகாசம் ந சோக: ஹ்ருதயமபி முஷித்வா ஹர்ஷ ஸிந்தௌ ந்யதாஸ்த்வம் ஸ மம சமய ரோகாந் வாதகேஹாதிநாத தவ ததி க்ருதம் ஓஷே கோஷ யோஷா ஜநாநாம் அபஜத ஹ்ருதி ரோஷ: ந அவகாசம் ந சோக: ஹ்ருதயம் அபி முஷித்வா ஹர்ஷ ஸிந்தௌ ந்யதா: த்வம் ஸ மம சமய ரோகாந் வாத கேஹ அதிநாத तव दधिघृतमोषे घोषयोषाजनाना - मभजत हृदि रोषो नावकाशं न शोकः । हृदयमपि मुषित्वा हर्षसिन्धौ न्यधास्त्वं स मम शमय रोगान् वातगेहाधिनाथ !

குருவாயூரப்பா! நீ இடையர்கள் வீட்டில் இருந்த தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடினாய். இருந்த போதிலும் உன் மீது அங்கு இருந்த பெண்களுக்குக் கோபமோ வருத்தமோ உண்டாகவில்லை. என்ன காரணம்? நீ அவர்கள் உள்ளத்தையும் சேர்த்துத் திருடிவிட்டாய். அதனால் அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். அல்லவா? இப்படிப்பட்ட நீ எனது பிணிகளையும் திருடமாட்டாயா?***