Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 465)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
மம கலு பலிகேஹே யாசநம் ஜாதமாஸ்தாம் இஹ புநரபலாநாமக்ரதோ நைவ குர்வே இதி விஹித மதி: கிம் தேவ ஸந்த்யஜ்ய யாஜ்ஞாம் ததி க்ருதமஹரஸ்வம் சாருணா சோரணேந மம கலு பலி கேஹே யாசநம் ஜாதம் ஆஸ்தாம் இஹ புந: அபலாநாம் அக்ரத: ந ஏவ குர்வே இதி விஹித மதி: கிம் தேவ ஸந்த்யஜ்ய யாஜ்ஞாம் ததி க்ருதம் அஹர: த்வம் சாருணா சோரணேந मम खलु बलिगेहे याचनं जातमास्ता - मिह पुनरबलानामग्रतो नैव कुर्वे । इति विहितमतिः किं देव सन्त्यज्य याच्ञां दधिघृतमहरस्त्वं चारुणा चोरणेन
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன் மனதில், “நான் முன்பு மஹாபலியிடம் யாசித்து நின்றேன். (அது அவன் கர்வத்தை ஒடுக்க). ஆனால் கர்வம் இல்லாத இவர்களிடம் யாசிக்க மாட்டேன்”, என்று நினைத்தாய் போலும். இதனால்தான் நீ தயிரையும் வெண்ணெயையும் திருடி உண்டாயா?