Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 464)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
ப்ரதிநவ நவநீதம் கோபிகாத்தமிச்சந் கலபதமுபகாயந் கோமலம் க்வாபி ந்ருத்யந் ஸதய யுவதி லோகைரர்ப்பிதம் ஸர்பிரச்நந் க்வசந நவ விபக்வம் துக்தமப்யாபிபஸ்த்வம் ப்ரதிநவ நவநீதம் கோபிகா தத்தம் இச்சந் கலபதம் உபகாயந் கோமலம் க்வ அபி ந்ருத்யந் ஸதய யுவதி லோகை: அர்ப்பிதம் ஸர்பி: அச்நந் க்வசந நவ விபக்வம் துக்தம் அபி ஆபிப: த்வம் प्रतिनवनवनीतं गोपिकादत्तमिच्छन् कलपदमुपगायन् कोमलं क्वापि नृत्यन् । सदययुवतिलोकैरर्पितं सर्पिरश्नन् क्वचन नवविपक्वं दुग्धमत्यापिबस्त्वम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கோபிகைகள் உனக்குக் கொடுக்கும் புதிய வெண்ணெயை மிகவும் விரும்பினாய். அதற்காக உனது மழலைக் குரலால் இனிமையாகப் பாடினாய்; அழகாக நடனம் ஆடினாய்; இதைக் கண்டு மகிழ்ந்த இளம்பெண்கள் உனக்கு அளித்த வெண்ணெயை உண்டாய். அவர்கள் உனக்கு அளித்த காய்ச்சிய பாலைப் பருகினாய்.