Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 463)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
ஹல தர ஸஹிதஸ்த்வம் யத்ர யத்ரோபயாதோ விவச பதித நேத்ராஸ்தத்ர தத்ரைவ கோப்ய: விகலித க்ருஹ க்ருத்யா: விஸ்ம்ருதாபத்ய ப்ருத்யா முரஹர முஹுரத்யந்தாகுலா நித்யமாஸந் ஹல தர ஸஹித: த்வம் யத்ர யத்ர உபயாத: விவச பதித நேத்ரா: தத்ர தத்ர ஏவ கோப்ய: விகலித க்ருஹ க்ருத்யா: விஸ்ம்ருத அபத்ய ப்ருத்யா முரஹர முஹு: அத்யந்த ஆகுலா நித்யம் ஆஸந் हलधरसहितस्त्वं यत्र यत्रोपयातो विवशपतितनेत्रास्तत्र तत्रैव गोप्यः । विगलितगृहकृत्या विस्मृतापत्यभृत्या मुरहर मुहुरत्यन्ताकुला नित्यमासन्
முரன் என்னும் அசுரனை அழித்தவனே! குருவாயூரப்பா! கலப்பையைக் கையில் கொண்டவனாகிய பலராமனுடன் நீ எந்த இடங்களுக்குச் சென்றாயோ, அங்கு உள்ள கோபிகைகள் தங்களது குழந்தைகளையும் கவனிக்காமல் வீட்டு வேலைகளையும் கவனிக்காமல், வேலை செய்பவர்களையும் மறந்து, உன்னையே பார்த்து, அன்றாடம் ஆனந்தம் அடைந்தனர்.