Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 462)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
ததநு சரண சாரீ தாரகைஸ்ஸாகமாராத் நிலய ததிஷு கேலந் பால சாபல்ய சாலீ பவந சுக விடாலாந் வத்ஸகாம்ச்சாநுதாவந் கதமபி க்ருத ஹாஸைர் கோபகைர் வாரிதோSபூ: ததநு சரண சாரீ தாரகை: ஸாகம் ஆராத் நிலய ததிஷு கேலந் பால சாபல்ய சாலீ பவந சுக விடாலாந் வத்ஸகாந் ச அநுதாவந் கதம் அபி க்ருத ஹாஸை: கோபகை: வாரித: அபூ: तदनु चरणचारी दारकैः साकमारा - न्निलयततिषु खेलन् बालचापल्यशाली । भवनशुकबिडालान् वत्सकांश्चानुधावन् कथमपि कृतहासैर्गोपकैर्वारितोऽभूः
குருவாயூரப்பா! பின்னர் நீ நடக்கத் தொடங்கினாய். அப்போது ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து அனைத்து வீடுகளுக்கும் சென்று உனக்கே உரித்தான சேட்டைகளைச் செய்தாய். அவர்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட கிளி, பூனை, கன்றுக்குட்டி ஆகியவற்றை நீ துரத்திக் கொண்டு ஓடினாய். இதனைக் கண்டு மகிழ்ந்த கோபர்கள் சிரித்துக் கொண்டே உன் பின்னால் ஓடிவந்து உன்னைப் பிடித்தனர் அல்லவா?