Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 461)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
ஸ்நுத குச பரமங்கே தாரயந்தீ பவந்தம் தரல மதி யசோதா ஸ்தந்யதா தந்ய தந்யா கபட பசுப மத்யே முக்த ஹாஸாங்குரம் தே தசந முகுள ஹ்ருத்யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ ஸ்நுத குச பரம் அங்கே தாரயந்தீ பவந்தம் தரல மதி யசோதா ஸ்தந்யதா தந்ய தந்யா கபட பசுப மத்யே முக்த ஹாஸ அங்குரம் தே தசந முகுள ஹ்ருத்யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷ स्नुतकुचभरमङ्के धारयन्ती भवन्तं तरळमति यशोदा स्तन्यदा धन्यधन्या । कपटपशुप मध्ये मुग्धहासाङ्कुरं ते दशनमुकुळहृद्यं वीक्ष्यं वक्त्रं जहर्ष
இடையனாக வேடம் கொண்டவனே! கபடனே! குருவாயூரப்பா! தானாகவே பால் சுரந்த பெரிய ஸ்தனங்கள் மூலமாக, உன்னைத் தனது மடியில் படுக்க வைத்து பால் ஊட்டிய யசோதை எத்தனை பேறு பெற்றவள்? இப்படியாக நீ பாலைப் பருகும்போது சிறிதாக முளைத்த மொட்டுப் போன்ற உனது பற்களையும், மயக்கும் புன்சிரிப்பையும் உடைய உனது திருமுகத்தைக் கண்ட யசோதை மிகவும் மகிழ்ந்தாள் அல்லவா?