Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 460)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
த்ருத கதிஷு பதந்தாவுத்திதௌ லிப்த பங்கௌ திவி முநிபிரபங்கை: ஸஸ்மிதம் வந்த்ய மாநௌ த்ருதமத ஜநநீப்யாம் ஸாநுகம்பம் க்ருஹீதௌ முஹுரபி பரிரப்தௌ த்ராக் யுவாம் கம்பிதௌ ச த்ருத கதிஷு பதந்தௌ உத்திதௌ லிப்த பங்கௌ திவி முநிபி: அபங்கை: ஸஸ்மிதம் வந்த்ய மாநௌ த்ருதம் அத ஜநநீப்யாம் ஸாநுகம்பம் க்ருஹீதௌ முஹு: அபி பரிரப்தௌ த்ராக் யுவாம் கம்பிதௌ ச दृतगतिषु पतन्तावुत्थितौ लिप्तपङ्कौ दिवि मुनिभिरपङ्कैः सस्मितं वन्द्यमानौ । द्रुतमथ जननीभ्यां सानुकम्पं गृहीतौ मुहुरपि परिरब्धौ द्राग्युवां चुम्बितौ च
குருவாயூரப்பா! நீங்கள் இருவரும் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தீர்கள். அப்போது வேகமாக நடக்க முயற்சிக்கும்போது கீழே விழுந்தீர்கள். அதனால் கீழே உள்ள சேறு உங்கள் மீது படிந்தது. இப்படியாக உன்னைக் கண்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கும் முனிவர்கள் மகிழ்வுடன் வணங்கினர். பின்னர் உங்கள் தாய்மார்கள் விரைந்து வந்து உங்களைத் தூக்கி அணைத்துக் கொண்டு முத்தம் பொழிய ஆரம்பித்தனர்.