Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 458)
Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்
ம்ருது ம்ருது விஹஸந்தாவுந்மிஷத் தந்தவந்தௌ வதந பதித தேசௌ த்ருச்ய பாதாப்ஜ தேசௌ புஜ கலித கர அந்த வ்யாலகத் கங்கண அங்கௌ மதிமஹரதமுச்சை: பச்யதாம் விச்வந்ரூணாம் ம்ருது ம்ருது விஹஸந்தௌ உந்மிஷத் தந்தவந்தௌ வதந பதித தேசௌ த்ருச்ய பாதாப்ஜ தேசௌ புஜ கலித கர அந்த வ்யாலகத் கங்கண அங்கௌ மதிம் அஹரதம் உச்சை: பச்யதாம் விச்வந்ரூணாம் मृदु मृदु विहसन्तावुन्मिषद्दन्तवन्तौ वदनपतितकेशौ दृश्यपादाब्जदेशौ । भुजगलितकरान्तव्यालगत्कङ्कणाङ्कौ मतिमहरतमुच्चैः पश्यतां विश्वनॄणाम्
குருவாயூரப்பா! நீங்கள் இருவரும் மெதுவாக மென்மையாகச் சிரித்தீர்கள். உங்கள் பற்கள் சிறிதாக அழகாக வெளியில் தெரிந்தன. உங்கள் தலைமுடி அழகாக உங்கள் முகங்களில் புரண்டன. பல ஆபரணங்களுடன் உங்கள் திருப்பாதங்கள் அழகாக காணப்பட்டன. புஜங்களில் அணிவிக்கப்பட்ட வளையல்கள் நழுவி மணிக்கட்டில் வந்து விழுந்து, அதற்கான அடையாளங்களும் ஏற்பட்டிருந்தன. இப்படியாக உன்னைக் கண்டவர்கள் மனதைக் கவர்ந்தீர்கள்.