Sriman Narayaneeyam - Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள் (ச்லோகம் 457)

Dasaka 45 - ஸ்ரீக்ருஷ்ணனின் பால விளையாட்டுகள்

அயி ஸபல முராரே பாணி ஜாநு ப்ரசாரை: கிமபி பவநபாகாந் பூஷயந்தௌ பவந்தௌ சலித சரண குஞ்ஜௌ மஞ்ஜு மஞ்ஜீர சிஞ்ஜா ச்ரவண குதுக பாஜௌ சேரதுச்சாரு வேகாத் அயி ஸபல முராரே பாணி ஜாநு ப்ரசாரை: கிம் அபி பவந பாகாந் பூஷயந்தௌ பவந்தௌ சலித சரண குஞ்ஜௌ மஞ்ஜு மஞ்ஜீர சிஞ்ஜா ச்ரவண குதுக பாஜௌ சேரது: சாரு வேகாத் अयि सबल मुरारे पाणिजानुप्रचारैः किमपि भवनभागान् भूषयन्तौ भवन्तौ । चलितचरणकञ्जौ मञ्जुमञ्जीरशिञ्जा - श्रवणकुतुकभाजौ चेरतुश्चारु वेगात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பலராமனுடன் உள்ளவனே! நீயும் பலராமனும் சிறு குழந்தைகளாக, உங்கள் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றித் தவழ்ந்து தவழ்ந்து நந்தகோபரின் வீட்டின் அனைத்து இடங்களிலும் சென்றீர்கள். இப்படியாக அந்த வீடு அழகு பெற்றது. தாமரை போன்ற உனது கால்களில் கட்டப்பட்ட சலங்கைகள் நீ தவழ்ந்தபோது ஒலித்தன. அந்த ஒலியை மேலும் கேட்க விரும்பிய நீ மிகவும் விரைவாகத் தவழ்ந்தாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-8-21 முதல் x-8-31 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.