Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 453)

Dasaka 44 - நாமம் சூட்டுதல்

ஸ்நிஹ்யதி யஸ்தவ புத்ரே முஹ்யதி ஸ ந மாயிகை: புந: சோகை: த்ருஹ்யதி ய: ஸ து நச்யேதித்யவதத் தே மஹத்வம்ருஷிவர்ய: ஸ்நிஹ்யதி ய: தவ புத்ரே முஹ்யதி ஸ ந மாயிகை: புந: சோகை: த்ருஹ்யதி ய: ஸ து நச்யேத் இதி அவதத் தே மஹத்வம் ருஷி வர்ய: स्निह्यति यत्सव पुत्रे मुह्यति स न मायिकैः पुनश्शोकैः । दृह्यति यस्स तु नश्येदित्यवदत्ते महत्त्वमृषिवर्यः

குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த முனிவர் உனது தந்தையிடம், “உன்னுடைய மகன் மீது ஆசையும் ப்ரியமும் கொள்பவர்கள் எந்தவிதமான மாயை, துன்பங்கள் ஆகியவற்றில் இருந்தும் மீட்கப்படுவர். ஆனால் உனது மகனைத் தூஷிப்பவர்களும் வஞ்சிப்பவர்களும் அழிந்துவிடுவர்”, என்றார்.