Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 452)
Dasaka 44 - நாமம் சூட்டுதல்
அந்யாம்ச்ச நாம பேதாந் வ்யாகுர்வந் அக்ரஜே ச ராமாதீந் அதிமாநுஷாநுபாவம் ந்யகதத் த்வாமப்ரகாசயந் பித்ரே அந்யாந் ச நாம பேதாந் வ்யாகுர்வந் அக்ரஜே ச ராம ஆதீந் அதிமாநுஷ அநுபாவம் ந்யகதத் த்வாம் அப்ரகாசயந் பித்ரே अन्यांश्च नामभेदान् व्याकुर्वन्नग्रजे च रामादीन् । अतिमानुषानुभावं न्यगदत्त्वामप्रकाशयन् पित्रे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த முனிவர் உனக்கு மேலும் பல பெயர்களைக் சூட்டினார். அதன் பின்னர் உன்னுடைய மூத்தவனுக்கு இராமன் என்ற பெயரையும் சூட்டினார். அதனைத் தொடர்ந்து தான் சூட்டிய பெயர்களுக்கான விளக்கங்களையும் கூறினார். பின்னர் உன்னுடைய உண்மையான ரூபத்தை அறிவிக்காமல், நீ மனிதர்களுக்கு உள்ள திறமை மற்றும் பெருமைகளைக் கடந்து நிற்பாய் என்றார்.