Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 450)

Dasaka 44 - நாமம் சூட்டுதல்

கதமஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர நாம்நோ அநந்த நாம்நோ வா இதி நூநம் கர்கமுநிச்சக்ரே தவ நாம ரஹஸி விபோ கதம் அஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர நாம்ந: அநந்த நாம்ந: வா இதி நூநம் கர்க முநி: சக்ரே தவ நாம ரஹஸி விபோ कथमस्य नाम कुर्वे सहस्रनाम्नो ह्यनन्तनाम्नो वा । इति नूनं गर्गमुनिश्चक्रे तव नाम नाम रहसि विभो

குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஆயிரம் திருநாமங்களை மட்டும் அல்லாமல், எண்ண இயலாத அளவிற்குப் திருநாமங்கள் உடைய உனக்கு எந்தத் திருநாமத்தைச் சூட்டுவது என்று கர்க்கர் தனது மனதில் வியந்தார். அதனால்தான் இரகசியமாகப் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா?