Sriman Narayaneeyam - Dasaka 44 - நாமம் சூட்டுதல் (ச்லோகம் 448)

Dasaka 44 - நாமம் சூட்டுதல்

நந்தோSத நந்திதாத்மா ப்ருந்திஷ்டம் மாநயந்நமும் யமிநாம் மந்த ஸ்ஸ்மிதார்த்ரமூசே த்வத் ஸம்ஸ்காராந் விதாதுமுத்ஸுகதீ: நந்த: அத நந்தித ஆத்மா ப்ருந்திஷ்டம் மாநயந் அமும் யமிநாம் மந்த ஸ்மித ஆர்த்ரம் ஊசே த்வத் ஸம்ஸ்காராந் விதாதும் உத்ஸுக தீ: नन्दोऽथ नन्दितात्मा वृन्दिष्टं मानयन्नमुं यमिनाम् । मन्दस्मितार्द्रमूचे त्वत्संस्कारान् विधातुमुत्सुकधीः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவரைக் கண்ட நந்தகோபர் மிகவும் சந்தோஷம் கொண்டார். முனிவர்களில் பெருமை மிக்க அவரை நன்றாகப் போற்றி உபசரித்தார். பின்னர் அவரை நோக்கி உனக்கு வேண்டிய நாமகரணத்தைச் செய்யும்படி பணிவுடன் கூறினார்.