Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 446)
Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்
வாதாத்மகம் தநுஜமேவமயி ப்ரதூந்வந் வாதோத்பவாந் மம கதாந் கிமு நோ துநோஷி கிம் வாகரோமி புநரப்யநிலாலயேச நிச்சேஷ ரோக சமநம் முஹுரர்த்தயே த்வாம் வாத ஆத்மகம் தநுஜம் ஏவம் அயி ப்ரதூந்வந் வாத உத்பவாத் மம கதாந் கிமு நோ துநோஷி கிம் வா கரோமி புந: அபி அநில ஆலய ஈச நிச்சேஷ ரோக சமநம் முஹு: அர்த்தயே த்வாம் वातात्मकं दनुजमेवमयि प्रधून्वन् वातोद्भवान् मम गदान् किमु नो धुनोषि । किं वा करोमि पुरनप्यनिलालयेश निश्शेषरोगशमनं मुहुरर्थये त्वाम्
ஈசனே! க்ருஷ்ணா ! குருவாயூரப்பா! காற்றின் வடிவம் கொண்டு வந்த அசுரனை நீ இப்படியாக வதம் செய்தாய். வாதத்தின் மூலமாக வந்த எனது பிணியை நீ ஏன் நீக்கவில்லை? நான் என்ன செய்வது? எனது பிணிகள் அனைத்தையும் தீர்க்கும்படி உன்னை மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.***