Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 445)

Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்

பூயோSபி கிந்நு க்ருணும: ப்ரணதார்த்திஹாரீ கோவிந்த ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந: இத்யாதி மாதரபித்ரு ப்ரமுகை: ததாநீம் ஸம்ப்ரார்த்திதஸ்த்வதவநாய விபோ த்வமேவ பூய: அபி கிம் நு க்ருணும: ப்ரணதார்த்திஹாரீ கோவிந்த ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந: இத்யாதி மாத: பித்ரு ப்ரமுகை: ததாநீம் ஸம்ப்ரார்த்தித: த்வத் அவநாய விபோ த்வம் ஏவ भूयोऽपि किन्नु कृणुमः प्रणतार्तिहारी गोविन्द एव परिपालयतात्सुतं नः । इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव

குருவாயூரப்பா! அப்போது உனது தாய், தந்தை மற்றும் ஆயர்கள் அனைவரும், “தன்னுடைய அடியார்களின் துன்பத்தை நீக்கும் கோவிந்தனே எங்கள் குழந்தையைக் காக்க வேண்டும். இவ்வாறு அவனை வேண்டுவதைத் தவிர நாங்கள் என்ன செய்வது?”, என்று துதித்தனர். இப்படியாக உன்னைக் காப்பாற்றும்படி உன்னையே வேண்டுவது வியப்பு!