Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 444)

Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்

ஏகைகமமாசு பரிக்ருஹ்ய நிகாமநந்தந் நந்தாதி கோப பரிரப்த விசும்பிதாங்கம் ஆதாது காம பரிசங்கித கோபநாரீ ஹஸ்தாம்புஜ ப்ரதிதம் ப்ரணுமோ பவந்தம் ஏக ஏகம் ஆசு பரிக்ருஹ்ய நிகாம நந்தந் நந்தாதி கோப பரிரப்த விசும்பித அங்கம் ஆதாது காம பரிசங்கித கோபநாரீ ஹஸ்த அம்புஜ ப்ரதிதம் ப்ரணும: பவந்தம் एकैकमाशु परिगृह्य निकामनन्द - न्नन्दादिगोपपरिरब्धविचुम्बताङ्गम् । आदातुकामपरिशङ्कितगोपनारी - हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்டு வியப்புடன் மகிழ்ந்த நந்தகோபரும் மற்றவர்களும் ஒருவர்பின் ஒருவராக உன்னைக் தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்ந்தனர். உன்னைக் கட்டி அணைத்து முத்தம் இட்டனர். அந்த நேரம் உன்னை ஆய்ச்சி பெண்கள் தூக்கிக் கொள்ள விரும்புவதை உணர்ந்த நீ, அவர்களது தாமரை மலர் போன்ற சிவந்த அழகிய கைகளுக்குத் தாவினாய். இத்தகைய உன்னைப் பணிக்கிறோம்.