Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 443)

Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்

க்ராவ ப்ரபாத பரிபிஷ்ட கரிஷ்ட தேஹ ப்ரஷ்டாஸு துஷ்ட தநுஜோபரி த்ருஷ்ட ஹாஸம் ஆக்நாநமம்புஜ கரேண பவந்தமேத்ய கோபா ததுர்கிரிவராதிவ நீலரத்நம் க்ராவ ப்ரபாத பரிபிஷ்ட கரிஷ்ட தேஹ ப்ரஷ்டாஸு துஷ்ட தநுஜ உபரி த்ருஷ்ட ஹாஸம் ஆக்நாநம் அம்புஜ கரேண பவந்தம் ஏத்ய கோபா தது: கிரிவராத் இவ நீலரத்நம் ग्रावप्रपातपरिपिष्टगरिष्ठदेह - भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् । आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम्

குருவாயூரப்பா! பாறையின் மீது விழுந்ததால் அந்த அசுரனின் பெரிய உடலானது மிகவும் சிதைந்து காணப்பட்டது. உயிரற்ற அந்த உடலின் மீது அமர்ந்திருந்த நீ, உனது தாமரை போன்ற அழகிய கைகளால் அதனை தட்டிக் கொண்டும், சிரித்து மகிழ்ந்து கொண்டும் இருந்தாய் அல்லவா? உடனே உன் அருகில் வந்த ஆயர்கள், பெரிய மலையான அந்த உடலில் இருந்து நீல இரத்தினத்தினைப் போன்ற உன்னை எடுத்தனர்.