Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 442)
Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்
ரோதாகுலாஸ்ததநு கோபகணா பஹிஷ்ட பாஷாண ப்ருஷ்ட புவி தேஹமதிஸ்தவிஷ்டம் ப்ரைக்ஷந்த ஹந்த நிபதந்தமமுஷ்ய வக்ஷஸி அக்ஷீணமேவ ச பவந்தமலம் ஹஸந்தம் ரோதாகுல: தத் அநு கோபகணா பஹிஷ்ட பாஷாண ப்ருஷ்ட புவி தேஹம் அதிஸ்தவிஷ்டம் ப்ரைக்ஷந்த ஹந்த நிபதந்தம் அமுஷ்ய வக்ஷஸி அக்ஷீணம் ஏவ ச பவந்தம் அலம் ஹஸந்தம் रोदाकुलास्तदनु गोपगणा बहिष्ठ - पाषाणपृष्ठभुवि देहमतिस्थविष्ठम् । प्रैक्षन्त हन्त निपन्तममुष्य वक्ष - स्यक्षीणमेव च भवन्तमलं हसन्तम्
குருவாயூரப்பா! அழுது கொண்டிருந்த ஆயர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் ஒரு பாறை மீது அசுரனின் உடல் வீழ்ந்து கிடப்பதைக் கண்டனர். அவனது மார்பின் மீது நீ எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டனர். இது என்ன வியப்பு!