Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 441)

Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்

ரோதோபகர்ணந வசாதுபகம்ய கேஹம் க்ரந்தத்ஸு நந்தமுக கோப குலேஷு தீந: த்வாம் தாநவஸ்த்வகில முக்திகரம் முமுக்ஷு: த்வய்யப்ரமுஞ்சதி பபாத வியத் ப்ரதேசாத் ரோத உபகர்ணந வசாத் உபகம்ய கேஹம் க்ரந்தத்ஸு நந்தமுக கோப குலேஷு தீந: த்வாம் தாநவ: து அகில முக்திகரம் முமுக்ஷு: த்வயி அப்ரமுஞ்சதி பபாத வியத் ப்ரதேசாத் रोदोपकर्णनवशादुपगम्य गेहं क्रन्दत्सु नन्दमुखगोपकुलेषु दीनः । त्वां दानवस्त्वखिलमुक्तिकरं मुमुक्षु - स्त्वय्यप्रमुञ्चति पपात वियत्प्रदेशात्

குருவாயூரப்பா! உனது தாயின் அழுகைக் குரலைக் கேட்ட நந்தகோபரும் மற்றவர்களும் உனது வீட்டிற்கு ஓடி வந்தனர். காரணம் அறிந்த அவர்களும் அழுதனர். அப்போது தனது வலிமை இழந்த அசுரன் உன்னை விட்டுவிட எண்ணினான். ஆனால் அனைவருக்கும் முக்தி என்னும் விடுதலை அளிக்கும் நீ, அவனை விடவில்லை. ஆகவே உனது பாரம் தாங்காமல் உன்னுடன் சேர்ந்து அவனும் கீழே விழத் தொடங்கினான்.