Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 440)
Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்
தாவத் ஸ தாநவவரோSபி ச தீனமூர்த்தி: பாவத்க பார பரிதாரண லூந வேக: ஸங்கோசமாப ததநு க்ஷத பாம்ஸு கோஷே வ்யதாயத பவஜ்ஜநநீ நிநாத: தாவத் ஸ தாநவவர: அபி ச தீனமூர்த்தி பாவத்க பார பரிதாரண லூந வேக: ஸங்கோசம் ஆப தத் அநு க்ஷத பாம்ஸு கோஷே வ்யதாயத பவத் ஜநநீ நிநாத: तावत्स दानववरोऽपि च दीनमूर्ति - र्भावत्कभारपरिधारणलूनवेगः । सङ्कोचमाप तदनु क्षतपांसुघोषे घोषे व्यतायत भवज्जननीनिनादः
குருவாயூரப்பா! உன்னைத் தூக்கிச் சென்ற அசுரன், உனது பாரம் தாங்காமல் வேகம் குறைந்தவன் ஆனான். அவனது உடலும் சுருங்கி அசைவின்றி இருந்தான். இதனால் காற்றின் வேகம் குறைந்தது. எனவே காற்றின் ஓசையும், புழுதியும் அடங்கின. ஆயினும் உனது தாயின் அழுகை ஒலித்தது.