Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 439)

Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்

உத்தாமபாம்ஸு திமிராஹத த்ருஷ்டி பாதே த்ரஷ்டும் கிமப்யகுசலே பசுபால லோகே ஹா பாலகஸ்ய கிமிதி த்வதுபாந்தமாப்தா மாதா பவந்தமவிலோக்ய ப்ருசம் ருரோத உத்தாம பாம்ஸு திமிர ஆஹத த்ருஷ்டி பாதே த்ரஷ்டும் கிம் அபி அகுசலே பசுபால லோகே ஹா பாலகஸ்ய கிம் இதி த்வத் உபாந்தம் ஆப்தா மாதா பவந்தம் அவிலோக்ய ப்ருசம் ருரோத उद्दामपांसुतिमिराहतदृष्टिपाते द्रष्टुं किमप्यकुशले पशुपाललोके । हा बालक्स्य किमिति त्वदुपान्तमाप्ता माता भवन्तमविलोक्य भृशं रुरोद

குருவாயூரப்பா! எங்கும் படர்ந்த புழுதியின் காரணமாக அனைத்து இடங்களிலும் இருள் சூழந்தது. அங்கு இருந்த இடையர்கள், பசுக்கள் ஆகியவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அப்போது யசோதை, உன்னை நினைத்தவளாய், “குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ?”, என்று கூறியபடி ஓடி வந்தாள். உன்னை அங்கு காணாமல் கதறி அழத் தொடங்கினாள்.