Sriman Narayaneeyam - Dasaka 43 - த்ருணாவர்த்த வதம் (ச்லோகம் 437)
Dasaka 43 - த்ருணாவர்த்த வதம்
த்வாமேகதா குருமருத்புரநாத வோடும் காடாதிரூட கரிமாணமபாரயந்தீ மாதா நிதாய சயநே கிமிதம் பதேதி த்யாயந்த்யசேஷ்டத க்ருஹேஷு நிவிஷ்ட சங்கா த்வாம் ஏகதா குருமருத்புரநாத வோடும் காட அதிரூட கரிமாணம் அபாரயந்தீ மாதா நிதாய சயநே கிம் இதம் பத இதி த்யாயந்தீ அசேஷ்டத க்ருஹேஷு நிவிஷ்ட சங்கா त्वमेकदा गुरुमरुत्पुरनाथ वोढुं गाढाधिरूढगरिमाणमपारयन्ती । माता नोधाय शयने किमिदं बतेति ध्यायन्त्यचेष्टत गृहेषु निविष्टशङ्का
குருவாயூரப்பா! ஒரு நாள் உன்னைத் தனது மடியில் வைத்திருந்த யசோதை, நீ திடீரென மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தாள். மனதில் கவலையுடன் படுக்கையில் படுக்க வைத்து, வீட்டு வேலைகள் செய்யத் தொடங்கினாள்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-7-18 முதல் x-7-33 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.