Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 436)

Dasaka 42 - சகடாஸுரன் வதம்

ப்ரபுஜிதைஸ்தத்ர ததோ த்விஜாதிபி: விசேஷதோ லம்பித மங்களாசிஷ: வ்ரஜம் நிஜைர்பால்யரஸைர் விமோஹயந் மருத்புராதீச: ருஜாம் ஜஹீஹி மே ப்ரபுஜிதை: தத்ர தத: த்விஜாதிபி: விசேஷத: லம்பித மங்கள ஆசிஷ: வ்ரஜம் நிஜை பால்ய ரஸை: விமோஹயந் மருத்புராதீச: ருஜாம் ஜஹீஹி மே प्रपूजितैस्तत्र ततो द्विजातिभिर्विशेषतो लम्भितमङ्गलाशिषः । व्रजं निजैर्बाल्यरसैर्विमोहयन् मरुत्पुराधीश रुजां जहीहि मे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பின்னர் அங்கு இருந்த பிராமணர்களால் நீ நன்றாக ஆசீர்வதிக்கப்பட்டாய். இப்படியாக உனது சிறிய வயதிற்கு உரிய லீலைகளால் கோகுலத்தை மகிழச் செய்தாய். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.***