Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 434)
Dasaka 42 - சகடாஸுரன் வதம்
அயே ஸுதம் தேஹி ஜகத்பதே: க்ருபா தரங்க பாதாத் பரிபாதமத்ய மே இதி ஸ்ம ஸங்க்ருஹ்ய பிதா த்வதங்ககம் முஹுர்முஹு: ச்லிஷ்யதி ஜாத கண்டக: அயே ஸுதம் தேஹி ஜகத்பதே: க்ருபா தரங்க பாதாத் பரிபாதம் அத்ய மே இதி ஸ்ம ஸங்க்ருஹ்ய பிதா த்வத் அங்ககம் முஹு: முஹு: ச்லிஷ்யதி ஜாத கண்டக: अये सुतं देहि जगत्पतेः कृपातरङ्गपातात्परिपातमद्य मे । इति स्म सङ्गृह्य पिता त्वदङ्गुकं मुहुर्मुहुः श्लिष्यति जीतकण्टकः
குருவாயூரப்பா! உன்னுடைய தந்தை, “யசோதை! உலகையே காத்து நிற்கும் ஸ்ரீஹரி நமது குழந்தையைக் காப்பாற்றினான். என்னிடம் அந்தக் குழந்தையைக் கொடு”, என்று உன்னைத் தூக்கிக் கொண்டார். உன்னைத் தனது மார்போடு அணைத்து, உனது சிறிய அழகான திருமேனியை ஆசையுடன் மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டு தழுதழுத்தார்.