Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 431)

Dasaka 42 - சகடாஸுரன் வதம்

குமாரகஸ்யாஸ்ய பயோதரார்த்திந: ப்ரோதநே லோல பதாம்புஜாஹதம் மயா மயா த்ருஷ்டமநோ விபர்யகாத் இதி ஈச தே பாலக பாலகா ஜகு: குமாரகஸ்ய அஸ்ய பயோதர அர்த்திந: ப்ரோதநே லோல பத அம்புஜ ஆஹதம் மயா மயா த்ருஷ்டம் அந: விபர்யகாத் இதி ஈச தே பாலக பாலகா: ஜகு: कुमारकस्यास्य पयोधरार्थिनः प्ररोदने लोलपदाम्बुजाहतम् । मया मया दृष्टमनो विपर्यगादितीश ते पालकबालका जगुः

ஈசனே! குருவாயூரப்பா! அப்போது உன்னருகில் இருந்த சிறுவர்கள் அவர்களிடம், “பால் வேண்டும் என்பது போல் இந்தக் குழந்தை அழுதது. தனது தாமரை போன்ற அழகிய கால்களால் இந்த வண்டியை உதைத்தது. இதனால் வண்டி கீழே விழுந்தது. இப்படியே நாங்கள் கண்டோம்”, என்று கூறினர்.