Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 430)

Dasaka 42 - சகடாஸுரன் வதம்

கஸ்கோ நு கௌதஸ்குத: ஏஷ விஸ்மயோ விசங்கடம் யச்சகடம் விபாடிதம் ந காரணம் கிஞ்சிதிஹேதி தே ஸ்திதா: ஸ்வ நாஸிகா தத்த கராஸ்தவதீக்ஷகா: க: க: நு கௌத: குத: ஏஷ விஸ்மய: விசங்கடம் யத் சகடம் விபாடிதம் ந காரணம் கிஞ்சித் இஹ இதி தே ஸ்திதா: ஸ்வ நாஸிகா தத்த கரா: த்வத் ஈக்ஷகா: कस्को नु कौतस्कुत एष विस्मयो विशङ्कटं यच्छकटं विपाटितम् । न कारणं किञ्चिदिहेति ते स्थिताः स्वनासिकादत्तकरास्त्वदीक्षकाः

குருவாயூரப்பா! அங்கு உள்ள அனைவரும், “இது என்ன? எப்படி நடந்தது? இத்தனை பெரிய வண்டி எவ்வாறு உடைந்தது? எந்தக் காரணமும் தெரியவில்லையே”, என்று தங்கள் மூக்கில் விரலை வைத்து வியப்புற்றனர். உன்னையே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.