Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 429)

Dasaka 42 - சகடாஸுரன் வதம்

சிசோரஹோ கிம் கிமபூதிதி த்ருதம் ப்ரதாவ்ய நந்த: பசுபாச்ச பூஸுரா: பவந்தமாலோக்ய யசோதயா த்ருதம் ஸமாச்வஸந்நச்ரு ஜலார்தர லோசநா: சிசோ: அஹோ கிம் கிம் அபூத் இதி த்ருதம் ப்ரதாவ்ய நந்த: பசுபா: ச பூஸுரா: பவந்தம் ஆலோக்ய யசோதயா த்ருதம் ஸமாச்வஸத் அச்ரு ஜல ஆர்தர லோசநா: शिशोरहो किं किमभूदिति द्रुतं प्रधाव्य नन्दः पशुपाश्च भूसुराः । भवन्तमालोक्य यशोदया धृतं समाश्वसन्नश्रुजलार्द्रलोचनाः

குருவாயூரப்பா! அப்போது, “ஆ! குழந்தைக்கு என்ன நடந்தது? என்ன நடந்தது?”, என்று பதறியபடி நந்தகோபரும் ப்ராமணர்களும் தங்கள் கண்களில் நீர் வழிய உன்னிடம் ஓடி வந்தனராமே! ஆயினும் நீ யசோதையின் கைகளில் அமைதியுடன் உள்ளதைக் கண்டு நிம்மதி கொண்டனர் அல்லவா?