Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 427)

Dasaka 42 - சகடாஸுரன் வதம்

ததோ பவத் த்ராண நியுக்த பாலக ப்ரபீதி ஸங்க்ரந்தந ஸங்குலாரவை: விமிச்ரமச்ராவி பவத் ஸமீபத: பரிஸ்புடத் தாரு சடச்சடா ரவ: தத: பவத் த்ராண நியுக்த பாலக ப்ரபீதி ஸங்க்ரந்தந ஸங்குலா ரவை: விமிச்ரம் அச்ராவி பவத் ஸமீபத: பரிஸ்புடத் தாரு சடத் சடா ரவ: ततो भवत्त्राणनियुक्तबालकप्रभीतिसङ्क्रन्दनसङ्कुलारवैः । विमिश्रमश्रावि भवत्समीपतः परिस्फुटद्दारुचटच्चटारवः

குருவாயூரப்பா! அப்போது உன்னைப் பார்த்துக் கொள்ள அருகில் அமர்ந்திருந்த சிறுவர்கள் மிகவும் பலமான சத்தம் எழுப்பினர். அதனுடன் மரங்கள் சடசட என முறிவது போன்ற ஓசையும் மிகவும் பலமாகக் கேட்டது.