Sriman Narayaneeyam - Dasaka 42 - சகடாஸுரன் வதம் (ச்லோகம் 426)
Dasaka 42 - சகடாஸுரன் வதம்
கதாபி ஜந்மர்க்ஷதிநே தவ ப்ரபோ நிமந்த்ரித ஜ்ஞாதி வதூ மஹீஸுரா மஹாநஸஸ்த்வாம் ஸவிதே நிதாய ஸா மஹாநஸாதௌ வவ்ருதே வ்ரஜேச்வரீ கதாபி ஜந்ம ருக்ஷ திநே தவ ப்ரபோ நிமந்த்ரித ஜ்ஞாதி வதூ மஹீஸுரா: மஹா அநஸ: த்வாம் ஸவிதே நிதாய ஸா மஹாந ஸாதௌ வவ்ருதே வ்ரஜேச்வரீ कदापि जन्मर्क्षदिने तव प्रभो निमन्त्रितज्ञातिवधूमहीसुरा । महानसस्त्वां सविधे निधाय सा महानसादौ ववृते व्रजेश्वरी
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரபோ! ஒருநாள் உன்னுடைய பிறந்த தினம் வந்தது. அன்றைய தினம் திருஆயப்பாடியின் தலைவியான யசோதை, அதனைக் கொண்டாட ப்ராமணர்கள், உறவினர்கள் முதலானோரை வீட்டிற்கு அழைத்தாள். உன்னை ஒரு பெரிய கட்டை வண்டியின் அடியில் தொட்டில் கட்டிப் படுக்க வைத்தாள். பின்னர் தனது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-7-4 முதல் x-7-15 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.