Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 424)
Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி
பவத் வபு: ஸ்பர்சந கௌதுகேந கராத்கரம் கோப வதூ ஜநேந நீதஸ்த்வமாதாம்ர ஸரோஜ மாலா வ்யாலம்பி லோலம்ப துலாமவாஸீ: பவத் வபு: ஸ்பர்சந கௌதுகேந கராத் கரம் கோப வதூ ஜநேந நீத: த்வம் ஆதாம்ர ஸரோஜ மாலா வ்யாலம்பி லோலம்ப துலாம் அவாஸீ: भवद्वपुःस्पर्शनकौतुकेन करात्करं गोपवधूजनेन । नीतस्त्वमाताम्रसरोजमालाव्यालम्बिलोलम्बतुलामलासीः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய அழகான திருமேனியைத் தொடுவதிலும் மகிழ்வு கொண்ட கோபிகைகள், ஒருவருக்கொருவர் உன்னை மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டனர். அப்போது நீ தாமரைமலர் மாலையில் ஒரு மலரை விட்டு மற்றொரு மலருக்கு தாவும் வண்டு போல் காணப்பட்டாய் அல்லவா?