Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 422)

Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி

க்ருஹேஷு தே கோமல ரூப ஹாஸ மித: கதா ஸங்குலிதா: கமந்ய: வ்ருத்தேஷு க்ருத்யேஷு பவந்நிரீக்ஷா ஸமாகதா: ப்ரத்யஹமத்யநந்தந் க்ருஹேஷு தே கோமல ரூப ஹாஸ மித: கதா ஸங்குலிதா: கமந்ய: வ்ருத்தேஷு க்ருத்யேஷு பவந் நிரீக்ஷா ஸமாகதா: ப்ரதி அஹம் அதி அநந்தந் गृहेषु ते कोमलरूपहासमिथः कथासङ्कुलिताः कमन्यः । वृत्तेषु कृत्येषु भवन्निरीक्षासमागताः प्रत्यहमत्यनन्दन्

குருவாயூரப்பா! ஆய்ச்சி பெண்கள் தங்கள் வீடுகளில் வேலை செய்து கொண்டிருக்கும்போதும் உனது அழகான உருவத்தையும், புன்சிரிப்பையும் பற்றியே பேசிக்கொண்டு மகிழ்வுற்றனர். அன்றாடம் தங்கள் வீட்டு வேலைகளை முடித்த பின்னர் உன்னைக் கண்டு இன்பமே அடைவார்களாமே!