Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 420)
Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி
சித்ரம் பிசாச்யா ந ஹத: குமார சித்ரம் புரைவாகதி சௌரிணேதம் இதி ப்ரசம்ஸந் கில கோப லோகோ பவந்முகாலோகரஸே ந்யமாங்க்ஷீத் சித்ரம் பிசாச்யா ந ஹத: குமார சித்ரம் புரா ஏவ அகதி சௌரிணா இதம் இதி ப்ரசம்ஸந் கில கோப லோக: பவத் முக ஆலோக ரஸே ந்யமாங்க்ஷீத் चित्रं पिशाच्या न हतः कुमारश्चित्रं पुरैवाकथि शौरिणेदम् । इति प्रशंसन् किल गोपलोको भवन्मुखालोकरसे न्यमाङ्क्षीत्
குருவாயூரப்பா! “இத்தனை பெரிய பிசாசு மூலம் இந்தக் குழந்தை உயிர் பிழைத்தது அதிசயமே! இப்படி ஓர் ஆபத்து உண்டாகும் என்று வஸுதேவர் கூறியதும் வியப்பே!”, என்பது போன்று கூறிய கோபர்கள், உனது அழகான திருமுகத்தைக் கண்டு மெய் மறந்தனர்.