Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 418)

Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி

த்வத் பீத பூத ஸ்தந தச்சரீராத் ஸமுச்சலந் உச்சதர: ஹி தூம: சங்காமதாநாகரவ: கிமேஷ கிம் சாந்தநோ கௌல் குலவோSதவேதி த்வத் பீத பூத ஸ்தந தத் சரீராத் ஸமுச்சலந் உச்சதர: ஹி தூம: சங்காம் அதாந் ஆகரவ: கிம் ஏஷ கிம் சாந்தந: கௌல்குலவ: அதவா இதி त्वत्पीतपूतस्तनतच्छरीरात् समुच्चलन्नुच्चतरो हि धूमः । शङ्कामधादागरवः किमेषु किं चान्दनो गौल्गुलवोऽथवेति

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னால் ஸ்தனங்கள் பருகப்பட்டிருந்தாலும், அவளுடைய சரீரத்தின் மீது அமர்ந்ததாலும், பூதனையின் உடல் பாவங்கள் நீங்கப் பெற்றதாக இருந்தது. அதனை எரித்தபோது மிகுந்த வாசனையுடன் புகை உயரமாகக் கிளம்பியது. இதனைக் கண்ட கோபர்கள், “இது அகிற்கட்டையில் தோன்றியதா, சந்தனக்கட்டையில் தோன்றியதா”, என்ற சந்தேகம் கொண்டனர்.