Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 417)
Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி
நிசம்ய கோபீ வசநாதுதந்தம் ஸர்வே அபி கோபா: பய விஸ்மயாந்தா: த்வத் பாதிதம் கோர பிசாச தேஹம் தேஹு: விதூரேSத குடார க்ருத்தம் நிசம்ய கோபீ வசநாந் உதந்தம் ஸர்வே அபி கோபா: பய விஸ்மய அந்தா: த்வத் பாதிதம் கோர பிசாச தேஹம் தேஹு: விதூரே அத குடார க்ருத்தம் निशम्य गोपीवचनादुदन्तं सर्वेऽपि गोपा भयविस्मयान्धाः । त्वत्पातितं घोरपिशाचदेहं देहुर्विदूरेऽथ कुठारकृत्तम्
குருவாயூரப்பா! நடந்த விவரங்களை கோபர்கள், ஆய்ச்சி பெண்கள் மூலம் அறிந்தனர். அவர்கள் அனைவரும் பயத்தாலும் வியப்பாலும், மரமாக நின்றனர். அதன் பின்னர் உன்னால் கொல்லப்பட்ட அந்த பயங்கரமான பிசாசின் உடலை, தங்கள் கோடரியால் துண்டு துண்டாக வெட்டினர். அவற்றை வெகுதூரம் கொண்டு சென்று எரித்தனர்.