Sriman Narayaneeyam - Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி (ச்லோகம் 416)
Dasaka 41 - கோபியர்களின் மகிழ்ச்சி
வ்ரஜேச்வர: சௌரிவசோ நிசம்ய ஸமாவ்ரஜந்நத்வநி பீத சேதா: நிஷ்பிஷ்ட நிச்சேஷ தரும் நிரீக்ஷ்ய கஞ்சித் பதார்த்தம் சரணம் கதஸ்த்வாம் வ்ரஜ ஈச்வர: சௌரி வச: நிசம்ய ஸமாவ்ரஜந் அத்வநி பீத சேதா: நிஷ்பிஷ்ட நிச்சேஷ தரும் நிரீக்ஷ்ய கஞ்சித் பதார்த்தம் சரணம் கத: த்வாம் व्रजेश्वरः शौरिवचो निशम्य समाव्रजन्नध्वनि भीतचेताः । निष्पिष्टनिश्शेषतरुं निरीक्ष्य कञ्चित्पदार्थं शरणं गतस्त्वाम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வசுதேவர் தனக்குக் கூறியதைக் கேட்ட நந்தகோபர் வீடு திரும்பினார். வரும் வழி முழுவதும் அவர் மனம் கலக்கமுற்று இருந்தது. தனது வீட்டருகில் அங்கு உள்ள மரங்கள் அனைத்தையும் பொடியாக்கி ஓர் உருவம் விழுந்து கிடப்பதைக் கண்டு பயந்தார். உன்னைத் தனது மனதால் சரணம் அடைந்தார்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-6-31 முதல் அத்யாயம் இறுதி முடிய உள்ளவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.