Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 414)

Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்

பயத கோஷண பீஷண விக்ரஹ ச்ரவண தர்சந மோஹித வல்லவே வ்ரஜபதே ததுர: ஸ்தலகேலநம் நநு பவந்தமக்ருஹ்ணத கோபிகா: பயத கோஷண பீஷண விக்ரஹ ச்ரவண தர்சந மோஹித வல்லவே வ்ரஜபதே தத் உர: ஸ்தல கேலநம் நநு பவந்தம் அக்ருஹ்ணத கோபிகா: भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे । व्रजपदे तदुरःस्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिकाः

குருவாயூரப்பா! பூதனையின் அதிபயங்கர கூச்சலைக் கேட்டும், அவளது பெரிய உருவத்தைக் கண்டும் கோகுலத்தில் இருந்த பலரும் மயக்கமுற்று விழுந்தனர். பிணமாய்க் கிடந்த பூதனையின் மார்பில் விளையாடிக் கொண்டிருந்த உன்னைச் சில ஆய்ச்சி பெண்கள் ஓடி வந்து தூக்கினர் அல்லவா?