Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 412)
Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்
ஸமதிருஹ்ய ததங்கமசங்கிதஸ் த்வமத பாலகலோபந ரோஷித: மஹதிவாம்ர பலம் குசமண்டலம் ப்ரதிசுசூஷித துர்விஷ தூஷிதம் ஸமதிருஹ்ய தத் அங்கம் அசங்கித: த்வம் அத பாலக லோபந ரோஷித: மஹத் இவ ஆம்ர பலம் குச மண்டலம் ப்ரதி சுசூஷித துர்விஷ தூஷிதம் समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषितः । महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम्
குருவாயூரப்பா! பல குழந்தைகள் அவளால் கொல்லப்பட்டதால் அவள் மீது நீ மிகுந்த கோபம் கொண்டாய். சிறிதும் பயம் இன்றி அவளது உடலில் ஏறிய நீ, பெரிய மாம்பழம் போன்றதும் விஷம் தடவியதும் ஆகிய அவளது ஸ்தனங்களை உயிருடன் சேர்த்து உறிஞ்சினாய் அல்லவா?