Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 411)
Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்
லலித பாவ விலாஸ ஹ்ருதாத்மபி: யுவதிபி: ப்ரதிரோத்துமபாரிதா ஸ்தநமஸௌ பவநாந்த நிஷேதுஷீ ப்ரததுஷீ பவதே கபடாத்மனே லலித பாவ விலாஸ ஹ்ருத ஆத்மபி: யுவதிபி: ப்ரதிரோத்தும் அபாரிதா ஸ்தநம் அஸௌ பவந அந்த நிஷேதுஷீ ப்ரததுஷீ பவதே கபட ஆத்மனே ललितभावविलासहृतात्मभिर्युवतिभिः प्रतिरोद्धुमपारिता । स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மாயவனே! கபடனே! தனது நடை, உடை மற்றும் பாவனைகள் மூலமாக பூதனை, ஆய்ச்சி பெண்களை மயக்கினாள். பின்னர் வீட்டில் அமர்ந்து, அவள் உனக்கு தன்னுடைய ஸ்தனங்களால் பால் புகட்டத் தொடங்கினாள் அல்லவா?