Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 408)

Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்

இஹ ச ஸந்த்யநிமித்த சதாநி தே கடக ஸீம்நி ததோ லகு கம்யதாம் இதி ச தத்வசஸா வ்ரஜநாயகோ பவத் அபாயபியா த்ருதமாயயௌ இஹ ச ஸந்தி அநிமித்த சதாநி தே கடக ஸீம்நி தத: லகு கம்யதாம் இதி ச தத் வசஸா வ்ரஜநாயக: பவத் அபாய பியா த்ருதம் ஆயயௌ इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्ने ततो लघु गम्यताम् । इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ

குருவாயூரப்பா! வஸுதேவர் நந்தகோபரிடம், “நண்பரே! இங்கு தீய சகுணங்கள் பல தோன்றுகின்றன. அதனால் நீங்கள் அதிகம் தாமதிக்காமல் விரைவாக கோகுலம் திரும்புங்கள்”, என்றார். இதனைக் கேட்ட நந்தகோபர், உனக்கு என்ன தீங்கு விளையுமோ என்று பயந்து மிகவும் விரைவாக கோகுலம் வந்தார்.