Sriman Narayaneeyam - Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல் (ச்லோகம் 406)
Dasaka 40 - பூதனை முக்தி பெறுதல்
ததநு நந்தமமந்தசுபாஸ்பதம் ந்ருப புரீம் கரதாந க்ருதே கதம் ஸமவலோக்ய ஜகாத பவத்பிதா விதத கம்ஸ ஸஹாயஜந உத்யம: ததநு நந்தம் அமந்த சுப ஆஸ்பதம் ந்ருப புரீம் கர தாந க்ருதே கதம் ஸமவலோக்ய ஜகாத பவத் பிதா விதத கம்ஸ ஸஹாயஜந உத்யம: तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम् । समवलोक्य जगाद्भवत्पिता विदितकंससहायजनोद्यमः
குருவாயூரப்பா! என்றும் மங்களம் குறையாது விளங்கும் நந்தகோபர், கம்ஸனுக்கு கப்பம் கட்டுவதற்காக மதுராவிற்குச் சென்றார். அங்கு உள்ள கம்சனுடைய அதிகாரிகளின் தீய முயற்சிகளை உனது தந்தை வஸுதேவர் அறிந்தார். இதனை நந்தகோபரிடம் கூறினார்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-5-19 முதல் x-6-40 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.