Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 405)

Dasaka 39 - மாயையும் கோகுலமும்

பவத்குசல காம்யயா ஸ கலு நந்தகோபஸ்ததா ப்ரமோத பரஸங்குலோ த்விஜ குலாய கிந்நாததாத் ததைவ பசுபாலகா: கிமு ந மங்கலம் தேநிரே ஜகத் த்ரிதய மங்கள த்வமிஹ பாஹி மாமாமயாத் பவத் குசல காம்யயா ஸ கலு நந்தகோப: ததா ப்ரமோத பர ஸங்குல: த்விஜ குலாய கிம் ந அததாத் ததா ஏவ பசு பாலகா: கிமு ந மங்கலம் தேநிரே ஜகத் த்ரிதய மங்கள த்வம் இஹ பாஹி மாம் ஆமயாத் भवत्कुशलकाम्यया स खलु नन्दगोपस्तदा प्रमोदभरसङ्कुले द्विजकुलाय किन्नाददात् । तथैव पशुपालकाः किमु न मङ्गलं तेनिरे जगत्रितयमङ्गल त्वमिह पाहि मामामयात्

குருவாயூரப்பா! மிகுந்த ஆனந்தம் கொண்ட நந்தகோபர், உனது நலனுக்காக, ப்ராமணர்களுக்குப் பல தானங்கள் அளித்தார். அங்கு இருந்த யாதவர்கள் பலரும் அப்படியே மங்களமான செயல்களைச் செய்தனர். மூன்று உலகங்களுக்கும் மங்களங்கள் அளிப்பவனே! என்னுடைய பிணிகளைப் போக்க வேண்டும்.***