Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 404)
Dasaka 39 - மாயையும் கோகுலமும்
அஹோ கலு யசோதயா நவகலாய சேதாஹரம் பவந்தமலமந்திகே ப்ரதமமாபிபந்த்யா த்ருசா புந: ஸ்தநபரம் நிஜம் ஸபதி பாயயந்த்யா முதா மநோஹர தநுஸ்ப்ருசா ஜகதி புண்யவந்தோ ஜிதா: அஹோ கலு யசோதயா நவ கலாய சேதாஹரம் பவந்தம் அலம் அந்திகே ப்ரதமம் ஆபிபந்த்யா த்ருசா புந: ஸ்தநபரம் நிஜம் ஸபதி பாயயந்த்யா முதா மநோஹர தநு ஸ்ப்ருசா ஜகதி புண்யவந்த: ஜிதா: अहो खलु यशोदया नवकळायचेतोहरं भवन्तमलमन्तिके प्रथममपिबन्त्या दृशा । पुनः स्तनभरं निजं सपदि पाययन्त्या मुदा मनोहरतनुस्पृशा जगति पुण्यवन्तो जिताः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! புதிதாக மலர்ந்துள்ள காயாம்பூ போன்று நீ படுக்கையில் கிடந்தாய். மனதைக் கவர்கின்ற உனது திருமேனியை நெருங்கிய யசோதை கண்களால் உன்னைப் பருகினாள். தனது ஸ்தனங்களில் உனக்கு பால் ஊட்டினாள். உன்னுடைய அழகான மேனியை மெதுவாகத் தொட்டாள். இந்த உலகத்தில் இவள் செய்த புண்ணியத்தை யாரும் அடையவில்லை. அனைவரையும் விட புண்ணியத்தில் வெற்றி பெற்றாள்.