Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 403)
Dasaka 39 - மாயையும் கோகுலமும்
தத: பசுபமந்திரே த்வயி முகுந்த நந்தப்ரியா ப்ரஸூதிசயநேசயே ருததி கிஞ்சிதஞ்சத்பதே விபித்ய வநிதா ஜநைஸ்தநய ஸம்பவே கோஷிதே முதா கிமு வதாம்யஹோ ஸகலமாகுலம் கோகுலம் தத: பசுப மந்திரே த்வயி முகுந்த நந்த ப்ரியா ப்ரஸூதி சயநே சயே ருததி கிஞ்சித் அஞ்சத் பதே விபித்ய வநிதா ஜநை: தநய ஸம்பவே கோஷிதே முதா கிமு வதாமி அஹோ ஸகலம் ஆகுலம் கோகுலம் ततः पशुपमन्दिरे त्वयि मुकुन्द नन्दप्रिया - प्रसूतिशयनेशये रुदति किञ्चिदञ्चत्पदे । विबुध्य वनिताजनैस्तनयसंभवे घोषिते मुदा किमु वदाम्यहो सकलमाकुलं गोकुलम्
குருவாயூரப்பா! முகுந்தா! நந்தகோபரின் வீட்டில், அவரது மனைவியான யசோதையின் ப்ரஸவப் படுக்கையில் படுத்திருந்த நீ உனது கால்களை சிறிது அசைத்து அழுதாய். இதனைக் கேட்டு யசோதை மற்றும் அங்குள்ள கோபிகைகள் கண் விழித்தனர் உன்னைக் கண்டதும் பிறந்த குழந்தையைப் பற்றிய செய்தியை ஊர் முழுவதும் உற்சாகமாகக் கூறித் திரிந்தனர். இதனைக் கேட்ட அந்தக் கோகுலம் முழுவதுமே ஆனந்தத்தில் திளைத்ததாமே! இதனை நான் எப்படி வர்ணிப்பது?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-5-1 முதல் x-5-16 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த ச்லோகம் உள்ளது.