Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 402)
Dasaka 39 - மாயையும் கோகுலமும்
ப்ரகே புநரகாத்மஜா வசநமீரிதா பூபுஜா ப்ரலம்ப பக பூதநா ப்ரமுக தாநவா மாநிந: பவந்நிதந காம்யயா ஜகதி பப்ரமுர் நிர்ப்பயா: குமாரக விமாரக: கிமிவ துஷ்கரம் நிஷ்க்ருபை: ப்ரகே புந: ஆகாத்மஜா வசநம் ஈரிதா பூபுஜா ப்ரலம்ப பக பூதநா ப்ரமுக தாநவா மாநிந: பவத் நிதந காம்யயா ஜகதி பப்ரமு: நிர்ப்பயா: குமாரக விமாரக: கிம் இவ துஷ்கரம் நிஷ்க்ருபை: प्रगे पुनरगात्मजावचनमीरिता भूभुजा प्रलम्बबकपूतनाप्रमुखदानवा मानिनः । भवन्निधनकाम्यया जगति बभ्रमुर्निर्भयाः कुमारकविमारकाः किमिव दुष्करं निष्कृपैः
குருவாயூரப்பா! மறுநாள் காலையில் யோகமாயை கூறியதைக் கம்ஸன் மற்றவர்களுக்குக் கூறினான். இதனைக் கேட்ட கர்வம் உடைய ப்ரலம்பன், பகன் மற்றும் பூதனை போன்ற அசுரர்கள் உன்னைக் கொல்வதற்காக, அந்த நாட்டில் இருந்த பல குழந்தைகளைக் கொன்று, பயம் இல்லாமல் திரிந்தனர். இரக்கம் என்பதே அறியாதவர்கள் என்ன கெடுதல்தான் செய்யமாட்டார்கள்?