Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 401)
Dasaka 39 - மாயையும் கோகுலமும்
ந்ருசம்ஸதர கம்ஸ தே கிமு மயா விநிஷ்பிஷ்டயா பபூவ பவதந்தக: க்வசந சிந்த்யாம் தே ஹிதம் இதி த்வதநுஜா விபோ கலமுதீர்ய தம் ஜக்முஷீ ம்ருத்கண பணாயிதா புவி ச மந்திராண்யேயுஷீ ந்ருசம்ஸதர கம்ஸ தே கிமு மயா விநிஷ்பிஷ்டயா பபூவ பவத் அந்தக: க்வசந சிந்த்யாம் தே ஹிதம் இதி த்வத் அநுஜா விபோ கலம் உதீர்ய தம் ஜக்முஷீ ம்ருத்கண பணாயிதா புவி ச மந்திராணி ஏயுஷீ नृशंसतर कंस ते किमु मया विनिष्पिष्टया बभूव भवदन्तकः क्वचन चिन्त्यतां ते हितम् । इति त्वदनुजा विभो खलमुदीर्य तं जग्मुषी मरुद्गणपणायिता भुवि च मन्दिराण्येयुषी
குருவாயூரப்பா! அந்த மாயை கம்ஸனிடம், “கொடியவனே! கம்ஸா! என்னை இப்படி அடித்துக் கொல்வதால் என்ன பயன்? உன்னைக் கொல்ல ஒருவன் வேறு இடத்தில் பிறந்துள்ளான். உனது நன்மையை இப்போதாவது தேடிக் கொள்”, என்றாள். பின்னர் அவள் தேவகணங்களால் துதிக்கப்பட்டவளாக, பூமியில் பல கோயில்களில் நின்றாள்.