Sriman Narayaneeyam - Dasaka 39 - மாயையும் கோகுலமும் (ச்லோகம் 400)

Dasaka 39 - மாயையும் கோகுலமும்

தத: பவதுபாஸகோ ஜடிதி ம்ருத்யுபாசாதிவ ப்ரமுச்ய தரஸைவ ஸா ஸமதிரூடரூபாந்தரா அதஸ்தலமஜக்முஷீ விகஸதஷ்ட பாஹுஸ்புரந் மஹாயுதமஹோ கதா கில விஹாயஸா வித்யுதே தத: பவத் உபாஸக: ஜடிதி ம்ருத்யுபாசாத் இவ ப்ரமுச்ய தரஸா ஏவ ஸா ஸமதிரூட ரூபாந்தரா அத: தலம் அஜக்முஷீ விகஸத் அஷ்ட பாஹு: ஸ்புரந் மஹா ஆயுதம் அஹோ கதா கில விஹாயஸா வித்யுதே ततो भवदुपासको झटिति मृत्युपाशादिव प्रमुच्य तरसैव सा समधिरूढरूपान्तरा । अधस्तलमजग्मुषी विकसदष्टबाहुस्फुरन् महायुधमहो गता किल विहायसा दिद्युते

குருவாயூரப்பா! உன்னையே துதிப்பவர்கள் மற்றும் உனது அடியார்கள், யமனின் பாசக்கயிற்றில் இருந்து எப்படி விடுபடுவார்களோ அது போன்று அந்த மாயை (பெண் குழந்தை) கம்ஸனின் கைகளில் இருந்து விடுபட்டு, மேலே ஏறினாள். வேறு உருவம் அடைந்து, எட்டுக் கைகளுடன் ஆயுதம் ஏந்தியவளாகத் தோன்றினாள்.